பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.உற்றதுரைத்தல்

"கறங்கிடு மருவி, கானல்
கசந்துபோய்க் கடுகி வந்தாங்
கிறங்கிட, 'நொய்ய' லென்றே
யிருகையா லேந்தும் தாய்போல்
பிறங்கிடுங் கரைசார்ந் துள்ள
பெருமைசால் தெனம னுார்க்கின்
றுறங்கிடும் பொழுதே நீர், நா
னெருத்தன் போய் வந்தே" னென்றான் .

காகமுங் கரையும்; காமர்க்
களிவண்டு பாடும்; காணாக்
கூகையும் பொந்தில் குந்தும்;
குதித்தாடு மாட்டுக் குட்டி!
கோகிலம் குளுமை கூட்டிக்
கூவிடக் குறித்து வந்தென்
தேகமும் மறந்திக் காட்சி
தெவிட்டாது நுகர்ந்தே" னென்றேன்.

"ஊர்ப்புற முல்க்க வந்திங்
குயர் மரக் காவில் புக்குக்
கூர்ப்புறக் கொண்ட செய்தி
குறிப்புற வுரைப்பி ரையா!
வேர்ப்புறு மேனி நோக,
விதிர்ப்புறு காலும் நோக
எர்ப்புறந் திரிந்தோ ரோர்ந்தின்
றின்புறற்" கென்றான் , நண்பன் .

"களத்தினில் துாற்றிக் கண்ட
கம்பளந் திடுதல் போன்றும் ,
குளத்தினில் நீர்மு கந்து
கொள்வது போன்று மன்றே!
வளத்தினி லாண்பெண் கூடி
வயப்படு மின்பம் போன்றென்
னுளத்தினி லுணர்வைச் சொல்லா
லுரைத்திட முடியா தின்றே!