பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102


"காலையில் களிக்கப் பூத்த
கமலம்போல் கவினுண் டாகி,
மாலையில் மனக்கும் முல்லை
மலர் போலக் கமழ்வி ராக!
வேலையில் கழியா வேளை
விரும்பிச்செந் தமிழ்நூ லாய்ந்து
சோலையில் நாவ லாய்ச்சொல்
சுவையுடைத் தாக்கிக் கொள்வீர்!

இகதெழி லியகை யின்ன
திதனியல் பிதுவென் ரீர்!
அகத்தெழி லமையு மாறா
யறிவுநூ லதுகற் றாயீர்!
முகத்தெழில் முறுவல் கூட
முகிழ்க்காது, முதுமை யுற்றுச்
சகத்தெழில் சார்த்தி டாதே
சாப்பாட்டுக் காய்வாழ் வீரோ?

'நல்லது செய்தோர் துய்த்தல்
நல்லதே! நலம்தா டாதிங்
கல்லது செய்தோர் துய்த்தல்
அல்லதே!' யதுவல் லாமல் ,
'இல்லது செய்வோர்க் கென்றும்
இனமாக வேண்டா' மென்னும்
சொல்லது செய்தோன், பண்டைச்
சுயத்தமிழ் கவிஞன் கண்டீர்!

'செங்கதி ரொத்துச் செய்யும்
செயல்திற ஞண்மை யெய்தித்
திங்களே யொத்துச் சீர்சால்
செந்தண்மை சேரப் பெற்று,
மங்குலை யொத்து மண்ணில்
மலர்ச்சியைச் செய்து மக்கள்
எங்கனு மொத்தி ருந்திங்
கேற்றங்கொள் கென்றா னன்றே!