பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1O4
மாங்காய்க்குப் பன்னி ராண்டு
மாதவம் புரிந்த காதை,
காங்கேயன் கருவாய் வாய்த்துக்
கங்கையா றீன்ற காதை,
பாங்காகக் காதில் குந்தி
பையனைப் பெற்ற காதை,
ஓங்கியே வலக ளந்தவ
வுத்தம னுறங்கும் காதை!

கண் கட்டி வாழ்ந்து வந்த
காந்தாரி குழவிக் கல்லால்
புண்கட்ட வயிற்றின் மீது
புடைப்பது வியாசன் கண்டு,
'விண் கொட்டி வடியு' தென்று
விரைந்துதி ரத்தை வாரி
மண் கட்டித் தொட்டி சேர்த்து
மக்களாய் மாற்றுங் காதை!

'சிதலைசேர்ந் திரும்பைத் தின்று
செரித்த' தென் றுரைப்ப தொப்ப,
முதலைதான் பற்றி மென்று
முழுவதும் விழுங்கித் தீர்த்த
மதலையைப் பதிகம் பாடி
மகனாக்கும் காதை; - யேதும்
பதிலின்றி நம்பிப் பக்தி
பண்ணிப்பா ழானுேம் நாமே!

புதுமைக்குப் பொருந்தும் பொய்யாய்ப்
போரறம் புத்தி போதம்;
பதுமைக்குப் பொருந்தும் பொய்யாய்ப்
பாடல்பண் ணாடல்; பற்றும்
முதுமைக்குப் பொருந்தும் பொய்யாய்
மோட்சமும், நரகும்; முற்றும்
பொதுமைக்குப் பொருந்தும் பொம்மைப்
பூசையால் புவியொன் றிற்றே!