புரவல னுடன்நான் சென்று
புசித்தபின் பிரிந்து போகும்
இரவல னெனினு மென்னை
எதிர்பார்த்து நின்றி ருந்த
குரவலர் கொண்ட கூந்தல்
குவளைக்கண் பவளம் கொள்வாய்
பரிவலர்ப் பாவை, ஐயா !
பசியலர் விலையா?’ என்றாள்.
"எனைவிட்டுப் பிரியா தென்றும்
இருந்தஅப் பசியை நீ, நற்
பனைவட்டிற் பசுநெய் விட்டுப்
பரிமாறி விரட்டி னாய்! நான்
மனைவிட்டு வெளியில் செல்ல,
மரக்காவென் மனப்ப சிக்குப்
புனைவொட்ட விருந்து போட்டுப்
போக்கிற்று, பொன்னே!" என்றேன்.
நண்பனும் நவின்றான், நச்சு
நகையொடு நயந்து நின்றே:
"வெண்பனி விடியல் வேளை
விரும்பிடும் வெயில்போன் றீர், நீர்
தண்புன லாடி யுண்டு
தமிழ்நுகர் விக்கி ராயின்,
கண்பனி யுகுப்பா ளின்றிக்
கள்ளிகண் முன்நின்" றென்றே.
"பள்ளியிற் பயிலு மந்நாள்,
பைந்தமி. ழிளம்புல் லார்ந்திப்
புள்ளிமான் துள்ளி யோடிப்
போனதே' னென்னும் பொல்லாக்
கள்ளனின் கையிற் பட்ட
கள்ளிநா னெனந கைத்தாள்.
ஒள்ளிய கமலத் துள், பல்
லொளிர்முத்துப் பதிந்த தொத்தே!
பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/109
Jump to navigation
Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
