பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'108



'கண்ணென்று தானென் நெஞ்சைக்
களவாடிக் கொண்ட தென்ரறோ?
பண்ணென்று குரல்தா னென்னைப்
பணிந்திடச் செய்த தென்றோ?-
உண்ணின்ற வுவகை பொங்கி
உயர்ந்துவீ ழருவி யொப்ப
எண்ணின்றி நகைத்தான் நண்பன்,
இல்லாள் சொல் லினிக்கக் கேட்டே !

முந்தியெங் கும்நான் காணா
மோகன முளுமைக் காட்சி!
செந்துவ ரிதழ்வாய் மானும்,
செல்வனும் சிறுசொல் லாடி
அந்த நாள் பந்தம் கொண்ட
அருமறை வெளிப்பட் டின்றென்
சிந்தையிற் புகுந்து நீங்காச்
சித்திர மாய்த்தங் கிற்றே!

அலைமீதி லலையா யன்றென்
னக மகிழ் வெய்தச் சென்று ,
தலைமீது தண்ணீர் மொண்டு
தாமத மின்றிப் பெய் தாங்
கிலை மீது வந்து குந்தி
யிட்டதை யிருத்தா துண்டேன்;
கலைமீது கருத்தை வைத்தேன்,
கைவாயைக் கழுவும் போதே!

அன்னையே யடித்தா லென்ன?
அலறிச்சே யழுதா லென்ன?
புன்னையே பூத்தா லென்ன?
பொறி வண்டு புனைந்தா லென்ன?
'தன்னையே தானு யர்த்தித்
தலையாலே தனைத்தா னீனும்
தென்னையே’ என நான் சித்தம்
தெளிந்துவந் திருந்தேன் தீர்ந்தே!.