பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112


என்னிலை யின்ன தென்றன்
றியம்ப நின் றேற்றுக் கொண்டாள்;
தன்னிலே தனக்கு நாணித்
தலைதாழ்த்தித் தளியில் தங்கும்
கன்னிலேக் காட்சி யாகிக்
கைகூப்பிச் சமிக்க வென்றாள்
நன்னிலை கண்டு நானும்
நயம்பட, 'நல்ல' தென்றேன்.

குருகினி தோர்த்து குந்திக்
கொள்ளும் மீன் காண்ப தொப்ப,
அருகினி லமர்ந்திஃ தெல்லாம்
அகங்கொண்ட நண்ப னங்கே ,
'கருகின தோற்றம் மாறிக்
கவினுறு மயிலைக் கண்ணால்
பருகின' னெனவே பார்த்துப்
பண்ணினான், பகடிப் பாங்கே!