உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பகடி பண்ணல்


"பிறைபேணப் பெற்ற பேதைப்
பெண்ணும்பல், பாவம்! பேச்சின்
முறை பேணல் மறந்து விட்டு,
முழுகிப்போய் விட்ட தேபோல்
குறைபேணிக் கூத்தாட் டாடிக்
குவலயத் திருளைப் போக்கும்
இறைபேணு மியல்பை யோரா
தெதிர்த்தெழி லிழந்த" தென்றான்.

கொழுநனின் கூற்றைக் கேட்டுக்
குறிப்போர்ந்து கொண்ட கோதை,
"உழுநரின் உயர்வு மண்னுர
டுழுகின்ற கொழு"வின் சீராம்!
கழிசிையி னுயர்வு , முற்றும்
கதிர்கொண்ட மணிகள் சீராம்!
துழனி,சங் கீதத் துக்கே
தோற்றுவா யாவ தோரீர்!

பெண்ணின்பாற் பிழையே கானும்
பேராண்மைப் பேச்சா ளர்நீர்
விண்ணின்பால் மதியொப் பீராய்
விளங்கினும், விடிந்து வெய்யோன்
கண்ணிற்கா னுங்கால், பாவம் !
கழுவியே வுணவிட் டென்பெண்
உண்ணும்வெண் தட்டா யஃதுார்ந்
தொளிவதை யுனரி" ரென்றாள்.


'அம்பினை யெதிர்த்துத் தொட்டாள்
ஆற்றல்சா லம்பொன் றெ'ன்னக்
கொம்பினிற் குயில்போல் குந்திக்
குறுநகை கொண்டாள், "கூறின்,
தம்பியும் தமய னொத்துத்
தரிசனம் தரினும், 'தண்ணீர்ச்
செம்புசா லாகா' தென்றே
செப்புவ தறியீ" ரென்றாள்.