10
'பரோடா பாங்குப் பண மே என் பைக்கு வந்து விடு: சென்ட்ரல் பாங்குச் செல்வமே என்னைச் செழிப்படையச் செய்' என்று ஒரு கோடி உருப் போட்டாலும் உபயோகமில்லை.
உறுதியாக நான் இதனைச் சொல்கிறேன். ப்ரம்ம விதாப்னேதி பரம்பிரம்மத்தை அறிந்தவன் பிரம்மமாகின்றான் என்னும் சொல் பொய்யன்று. அந்தப் பிரம்மம் 'சத்தியம், ஞானம், அனந்தம்' என்ற மூன்று வகையில் வெளிப்படுவது.
இதுதான் தன்னைத் தானறியும் நிலை: 'தன்னையறிந்தவன் தலைவனையறிந்தான்' என்பது மறுக்க முடியாத கருத்து.இந்தத் தெளிந்த கருத்தையே 'சித்தமிசை குடிகொண்டு சித்தமறியாதிலகும் திவ்ய தேசோமயம்' என்று நமது தமிழ் செய்யுள் ஆணித்தரமாகச் சுட்டிக் காட்டுகிறது. இந்தத் தெய்விக உண்மைக் கருத்து தெரிந்திருந்தும் இதை ஒதுக்கிவிட்டு மாருக வேறு கூறுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
மக்களைத் துன்பத்தில் ஆழ்த்தித் துதிசெய்ய வைக்கும் சூழ்ச்சியே ஆகும். கோபதாபக் கொடுமைகளைப் புரிய வைத்து கற்சிலைகளைப் பூசிக்கச் செய்து புலனை மாய்ப்பதாகும்’ என்றது சத்வம். இது நிற்க.
இதற்கு மூலகாரனமானவர் யார்? இது ஏன்? எதற்காக? இந்தச் சிலைக் கடவுளை வைத்துச் சேவித்து தேசம் அடைந்த பயன் யாது? என்று அறிஞன் சிந்தித்துத் தெளிய வேண்டிய கால கட்டத்தில் இன்று நாட்டு நடைமுறையும் உள்ளது. மக்கள் மனத்தில் இன்று மலினம் நிலையாகக் குடி கொண்டு கொட்டும் முழக்கும் செவியைச் செவிடாக்குகிறது.
மிகப் பெரிய இக் கீழ்நோக்கிப் பாதையைக் காட்டி முதன்முதலில் மக்களை யழைத்துச் சென்ற அந்த மாமனிதனை நமக்கு அடையாளம் காட்டுகிறது ஈசா வாஸ்யோப நிசத்து 41-ம் பக்க அடிக்குறிப்பு.