பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
செய்தித்தாள்


தொண்டனே யாகச் செல்வத்
தோன்றலே யாகத் துய்போல்
வெண்டலை விருத்த னாக,-
வேனில் நாள் தீர்ந்த தேனும்
உண்டுறு மயர்வு மற்றிவ்
வுலகுக்கே பொதுவென் றோர்ந்தோர்,
திண்டுடன் பாயுங் கொண்டால்
தீர்த்திடா திருப்ப துண்டோ ?

விண்படு பறவை யெல்லாம்
விடியப்போ யிரைகண் டார்ந்து
புண்படும் வெயில்வந் துற்ற
பொழுதினில் பொழில்பு குந்து
கண்பட லறியார், என்னைக்
காணவந் தவர்,'க ருத்துப்
பண்படு மிடமிஃ' தென்றே
பாங்காக இருந்தார், பார்த்தே!

மஞ்சினை விட்டு வந்த
மதிமுகக் குவளைக் கண்மான்,
அஞ்சலி லிட்டு வந்தங்
கடைந்தநா ளிதழ்வி ரித்து,
நெஞ்சினை விட்டு வந்த
நிறைவினில் நேர்ப ருத்தி,
பஞ்சு, நூ லாடை யான
பான்மையாய்ப் படிக்க லானாள்!

காட்டிடை கண்ட செய்தி
களத்திடை விண்ட செய்தி,
வீட்டிடை யுண்ட செய்தி
விளம்பாம லண்டிக் கேட்க,
ஓட்டுடை யரசு, கட்சி,
உழைப்பாளர். நகரூ ருற்ற
நாட்டிடை நடந்த செய்தி
நசையோடு நவின்று ளன்றே!