பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விளக்கம்


நாடு நம் முடைய தாயும்
நலன் நமக் கில்லை; நாட்டில்
எடு,நம் முடைய தாயும்
இலக்கதி லில்லை; ஏட்டி
னூடு,நம் முடைய தாகா
துள்ளதுண் மைக்கு மாறாய் :
மாடுநம் முடைய தாய்ப்பால்
மடியய்யர்க் காகு மாறே!

தெய்வத்தைப் பற்றி யேதும்
தெரியாதோர், தெரியார்க் கேற்பப்
பொய்வைத்துப் புனைந்து ரைத்த
புராணத்துச் சொற்க ளுக்கே
மெய்வைத்து மனிதன் போலும்
மேன்மையாய்ச் சிலைசெய் வித்துச்
சைவத்தும் வைண வத்தும்
சனங்களைப் பினைத்தார், சார்த்தி!

நாவலந் தீவில் செய்த
நரியுப தேசம் கேண்மின் :
'கோவிலும் வில்வம்; கொண்ட
குண்டுக்கல் தெய்வம்! கொம்பில்
தாவிற்று குரங்கு திர்ந்த
தழைகுண்டுக் கல்மேல் வீழ
மூவுல காளும் வேந்தன்
முசுகுந்த ஞாயிற் றென்றே!

பெரியவர், அரசள், பெற்றொர்,
பிறரெலா மிருந்த மன்றில்
துரியனின் தம்பி தோதாய்த்
துரோபதைத் துகிலைப் பற்றி
உரியவே அவள் "கோ விந்தா!
உதவுக’ எனும்முன், ஊடே
அரிய தாய் வளர்ந்த தாமஃ
தாயிரம் மீட்டர் நீளம்!