பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நினைப்புற்று நேராய் மேரு
நின்றகத் தியனை நோக்கி, '
எனைப்பற்றி விந்தி யம்தான்
ஏ சிற்றாம் மகனே! யென்ன,
வினைப் பற்றி லான் போய்த் தன் கால்
விந்திய மலைமேல் வைக்கத்
தனைப்பற்றிக் காப்போ ரின்றித்
தாழ்ந்ததாம் தரையா யன்றே.

நம்பினோர் கெடமாட் டாராம்;
நான் மறைத் தீர்ப்பிஃ தாம்; நம்
கம்பனார் விடமாட் டாராய்க்
கதையினி லிதைவைத் தாரித்
தம்பிரான் கதையை தாங்கித்
தமிழ்தாழ்ந்த தன்றி, நண்பா!
கெம்பனுார் மக்காள்! தேசம்
கெடச்செய்த திந்தப் பொய்கள்!

நிலையினை, நெறிநின் றெண்ணி
நினைவிற்கொண் டியங்கச் செய்யார்;
சிலையினை வணங்கச் , செய்து
சிந்தையை யிருள்செய் வோராய்,
மலையெனப் பெருத்த பொய்கள்
மாணவி, மாண வர்க்குக்
கலை யெனும் பெயரால், காதில்
கசக்கி வார்க் கின்றா ரின்றும்!

பெண்னென, ஆணெ னத்தாம்
பிறந்தவர் பெருமை யெய்தற்
கெண்ணென, எழுத்தெ னத்தம்
மிதயத்தில் வைத்தற் கேற்கும்

கண் 'ணெனும் கல்வி யிற்பொய்
கலப்படம் செய்த தால், நம்
மண்ணினை மாற்றா ராள
மாட்சியை யிழந்தோ மென்றேன்.