பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122



கற்காலக் கல்லான் கண்டு
கழறிய கருத்தே யாகப்
பிற்காலப் பெரியோன் கண்டு
பேணிய கருத்தே யாக!
சொற்கோல மிட்டுக் கேட்கச்
சுவையாக இருப்பி னும், நாம்
தற்காலத் தவற்றைப் பற்றித்
தரமாய்தல் தவறன் றென்றே,

சுடரிதழ் சுருட்டி யெட்டச்
சுடர்க்கொடி யெறிந்தாள், சோர்ந்து .
படருங்கால், பசரி செய்யும்
பயிர்க்கிடர்! படிப்பில் பொய்கள்
தொடரின் மெய்க் கிடராம்! துாக்கித்
துரமா யெறிந்து நாட்டின்
இடரிதைக் களைவே மென்றான் ,
எனதரும் நண்ப னன்றே!