உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

கன்றொடு காலி காணுக்
கதிர்காணாத் தருக்கள் சூழ்ந்த
மன்றிடை, வீரர் மல்,வில்,
மறம்மிகு வாள்,வே லேந்தி
வென்றிடும் போர்ப்ப யிற்சி
விதியாகச் செய்வார்; வீரம்
ஒன்றிடு முளத்த ராய்த்தம்
முடலிடை யுறுதி யுற்றே!

சிலைவல்லோன், வாள்,வேல் வல்லோன்,
செறுநர்கைப் படையின் றேல்,மற்.
கலைவல்லோன் காலை மாலை
கற்பிக்க வும்கை வல்லோன்,
தொலைவில்லோ னொருவன் தங்கள்
தோன்றலாய்ந் தேர்ந்து கொண்டூர்த்
தலைவல்லோ ராகி வாழ்ந்தார்,
தன்னிகர் தான வோராய்!

மல்லினாற் பொரவந் தோரை
மல்லினால் வெல்வர்; மாய்க்க
வில்லினாற் பொரவந் தோரை
வில்லினால் வெல்வர்; விள்ளாக்
கல்லினாற் செய்த சிற்பக்
கவின்மிகு மெய்யர்; காட்டுப்
புல்லின லில்லம் வேய்ந்து,
புகழினால் தமைவேய்ந் தோரே!

யாருக்கும் தீங்கெண் ணுதல்
லாற்றல்சால் தோன்ற லென்றிப்
பாருக்குள் பெயர்பெற் றோனின்
பாட்டனு மொருவன்; பண்ணும்
போருக்குள் புலிபோல் பாய்ந்து
பொல்லார் வேல் பட்டுப் பொன்றப்
பேருக்கு நடுகல் லிட்டுப்
பேணிணார், பெரியோன் பீடே!