பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

125


என்பொடு தசையி யைந்த
இயல்பினி லிதயத் தென்றும்
அன்பொடு மமைந்த ஆற்ற
லளவறிந் தடங்கி யாய்ந்து
பொன்படு மணியாய்ப் பூண்ட
புகழ்மிகு தோன்றல் தேவி,
இன் பொடு மிதயத் தேற்றங்
கிருந்தகோட் பாடி ரண்டே!

அதிகாலை தனில் நீ ராடி
அகத்துறு மாவல் மேவக்
குதிகாலைத் தடவுங் கூந்தல்
கோதையின் முதுகிற் பாவக்
கதிகோலக் கடும்போர் செய்து
களம்பட்டோன் நடுகற் பால்போய்த்
துதிகோலிப் பரவல் செய்தாள், !
'தொட்டது துலக்கு கென்றே!

பிறையிலா வானே யென்னப்
பேறிலாப் பெண்தா ன்ன்றே;
‘துறையிலாக் கலமே யென்னத்
தொடர்பிலாத் துணைவி யன்றே!
கறையிலாத் தோன்ற லன்புக்
கனவனா யுள்ளான்; காணின்
குறையிலாள், எனினும் கொண்ட
கோட்பாடு நிறைகொள் ளற்கே,

பஞ்சரம் விட்டுச் சென்ற
பைங்கிளிப் பாவை . வாயால்
தன் சிரம் தாழ்ந்து வேண்டும்
தனிப்பட்ட வரமஃ தொன்று: '
நெஞ்சுர மற்றோ ருற்றோர்
நித்தமும் நிறைய வந்து