உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

'இவ் வுபநிசத்தில் எட்டு மந்திரங்களில் சொல்லிய விசயம் கீதை முதல் ஆறு அத்தியாயங்களிலும், பின் எட்டு மந்திரங்களில் சொல்லிய விசயம் நடு ஆறு அத்தியாயங்களிலும், முடிவில் இரண்டு அத்தியாயங்களில் சொல்லிய விசயம் கடை ஆறு அத்தியாயங்களிலும் விவரிக்கப்பட்டுள்ளன

(--- கூர நாராயனர் )


இப்பொழுது கீதையின் தாய் ஈசாவாஸ்யோபநிசத்து என்று நாம் அறிகிறோம்.

உபநிசத்து நமக்குச் சுட்டிக் காட்டும் பிரம்மம் அகம் பிரம்மாஸ்மி' -நானே பிரம்மமாயுள்ளேன்' என்பதாகும்.

இது தன்னையறிந்த நிலை; ஒவ்வொருவரும் சத்தியத்தை அறிந்து வாழ்க்கையில் மேற்கொண்டொழுகத் துாண்டும் நிலை: உலகில் அமைதியும் ஆனந்தமும் நின்று நிலவச் செய்யும் தெய்விகநிலை.

கீதைகாட்டும் நிலை நம்மைப் போன்ற ஒரு தாயின் வயிற்றில் பிறந்த ஒரு மனிதனை வணங்கச் செய்யும் நிலை, உருவ வழிபாட்டுக்கு இது அடித்தளம் அமைக்கிறது. ஒழுகு நிலைக்குரிய சத்தியம் எனும் சாலையில் ஒரு சிவப்புத்துணியைக் கட்டி, கரடு முரடான பயனற்ற புதிய வழியில் செல்லுமாறு கட்டளையிடுகிறது. சுருக்கிக் கூறின் கீதை நம்மை திசை தப்பச் செய்து வைக்கிறது.

'ருதம் சத்தியம் பரப் பிரம்மம்' எனும் உபநிசத்துக்கு மாறு கூறுகிறது. எரியும் திருவிளக்கை அனைத்து இருள் பரவச் செய்கிறது.

ருதம்- விவகார உண்மை; உலகில் காணும் ஒழுங்கும் அழகும்; சத்தியம் - உலகின் ஒழுங்குக்கும் அழகுக்கும் அடிப்படையான, பாரமார்த்திக உண்மை. இதனையே சத்தியம் சிவம் சுந்தனம்’ என்றும் குறிப்பிடுவர் ஆன்றோர்.