பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

129

எண்ணோராச் சீவ ராசி,-
இயங்குவ இருப்ப வென்றிம்
மண்ணாரத் தோன்றி, நின்று
மறைவன வாகப் பண்ணல்,
தண்ணீரும். நெருப்புங் காற்றும்
தாம் தவிர்க் காஇவ் வுண்மை
விண்ணோராய்த் தமையெண் ணும்மிவ்
வேதிய ரறிந்தா ரன்றே!

‘பரப்பிர்ம' மெனப்பே ரிட்டார்,
பரந்தியங் கும்காற் றிற்கே!
‘பரஞ்சோதி' யெனப்பே ரிட்டார்.
பரந்தெரி நெருப்பி னுக்கே!
'பரந்தாம' னெனப்பே ரிட்டார்,
பரந்து பெய் வான் நீ ருக்கே!
பரமர்த்த மறியா ராய்நாம்
பணிந்துபா ழாய்ப்போ னோமே!

விருப்பமும் வெறுப்பு மின்றி
விளக்கிடின் வெளியு முள்ளும்
நெருப்பொடு நீரும் காற்றும்
நிலமுங்கா ரணங்க ளாகி,
உருப்பெறு மூலத் தாதா
லுடலுயி ராண்பெண் ணென்னப்
புரப்புறத் தமைத்தா மீன்று
புறந்தந்து,- போகும் வாழ்வே!

'காற்று, நீர், நெருப்புக் கான
காரணப் பொருளைக் காணின்.
மாற்றருஞ் சக்தி வாய்ந்த
மாந்தர்கண் காண மாட்டா.-
தூற்றுக்கும் மேல், -வெவ் வேறாம்
துண்ணணு விணக்க' மென்பர்;
ஏற்ற இவ் வணுவெ னுஞ்சொற்
'சிறை'யெனும் பெயரு முண்டே'