பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

131

வெய்யிலும், மழையும், காற்றும்
வேதனை விளைவித் தாலும்,
மெய்யினில் மெலிவு மேவ
மிடிமையா லடிமை யாய்மற்
றுய்யுமா றின்றி நொந்தே
உழைப்பவ ரிறக்க, வுண்டிங்
கய்யர்கள் சிறக்க வைக்கும்
அநியாயக் கல்சிற் பங்கள்!

இயற்கையைப் பற்றியேதும்
எண்ணாரை யேய்ப்ப தற்காய்ச்
செயற்கையாய்ச் செய்து வைத்தார்
'சிவனயன் திருமா' லென்றே;
‘முயற்கொம்பு, நரிக்கொம்' பென்னும்
மூடர்வாய்ச் சொற்கள் போன்றே,
உயற்குத வாத்தெய் வங்கள்
உண்டெனல் குதிரைக் கொம்பே!

வில்லினை, வேலென் றனை
விவரமில் லாதா னென்போம்;
புல்லினைப் பூடென் றானைப்
புலனிலாப் பொடிய னென்போம்;
சொல்லினிற் பொருள்கா ணாதான்,
சுவர்க்கத்தைக் காண வைத்த
கல்லினைக் ‘கடவு' ளென்று
கழறுவோற் கிவர்மே லோரே!

'ஊழுங்கா லூக்கம் முக்கால்
உடையோரா யுண்மை யோம்பி.
வாழுங்கால் வழுத்தச் செய்து
வைத்தநற் செயல்பா டன்றித்
தாழுங்கால் புணையொன் றில்லை
தரணியில் மக்கட்' கென்றே.
வீழுங்கால் வினவி னோர்க்கு
விளக்கினாள், விரும்பி ஔவை!