பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சொற்கலகம்


‘ஏட்டுப்பா லிருந்த தெல்லாம்
எடுத்தெமக் கீந்தீ' ரென்றே,
வீட்டுப்பா லிருந்து வந்த
வேல்விழி விழைந்‘திங் கின்றிவ்
வாட்டுப்பால் கலந்த தேனீர்
அருந்துக!' வென,நான் ‘நீயென்
பாட்டுப்போ லிருந்திந் நாட்டில்
பாராட்டப் படுக!' என்றேன்.

விலக்கிட வுள்ள தெல்லாம்
விலக்கியே, விரும்பு மாறாய்த்
துலக்கிட வுள்ள தெல்லாம்
துலக்கிடும் தோன்றல் சொன்னான்:
'குலக்கொடி' குறுக்கி டாத
குணவதி துணிவி னால்தா
னிலக்கொடிங் குள்ளே னையா
லிங்கைய னென நா' னென்றே!

‘பூமாற்றிப் பூத்த' தென்னப்
பொலிமுகப் பாவை சொன்னாள்:
“நா மாற்றி யுரையா டாத
நல்லவ ரென நான் நம்பின்,
ஏமாற்று கின்றா ரையா!
எனையிவர் துதிகள் செய்தே!
தாமாற்றும் பணி யெல் லாமென்
தலைமீதில் தள்ளி" யென்றே.

"பதிசெய்வ தனைத்தும் பார்த்துப்
பங்குபற் றிக்கொள் கின்ற
விதிசெய்து கொண்டென் மீது
வீண்பழி சுமத்த வேண்டாம்!
‘மதிசெய்த மாதே! நீபெண்;
மனையொடு மகிழ்ந்தி ரெ'ன்றால்
நிதிசெய்து மிழந்தோ ரென்ன
நிலத்தை நீர் செய்வாய் நீயே!