பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

"'தானாவ தச்சில் தாங்கித்
தமிழ்செய்தித் தாள்வந் தாச்சு!
மானேவா! மக்கள் குந்தி
மகிழ்ச்சியாய் மாந்திச் செல்லத்
'தேனீவ' தெனவே வோதித்
தெளிவிப்பா யினிநீ' யென்றே,
நானேவாய் விட்ட ழைத்தேன்;
நயக்க நீ படித்தா" யென்றான்.

"இடங்களுக் கேற்ப ஏற்றம்
இறக்கமென் பதுவே யின்றி,
மடங்களில், மணவி ழாவில்
மறையவ ருளரல் போல்நீர்,
'தடங்கலில் லாமற் செல்லும்
தனிப்பேருந் தெ’னவா சித்துக்
கடங்கழிப் பீர்!கேட் பார்தம்
கருத்தினிற் படியா" தென்றாள்.

எனைவின வினர்போன் 'றுண்மை
எவர்சொலி' லெனநோக் கித்தம்
நினைவினில் நிலைத்து நின்று
நீள்மனை யெதிரொ லிக்க,
'நனைவினை புரிந்து முல்லை
நாவிதழ் நடுப்பூத்' தென்னப்
புனைவென லின்றி யுள்ளம்
பூரித்தார், நகைத்தப் போதே!

'பித்தர்தம் செயலெ'ன் பேனோ,
‘பேரின்பப் பெருக்' கென் பேனோ,
'சித்தசுத் தியினால் சேர்ந்த
செழுமையின் சிறப்பென்' பேனோ!
இத்தரை யரிதிற் பெற்ற
இல்லற நிறைவாங் கொல்லோ?
உத்தமச் சதிய திக்கோ
ருவமைநா னுணர்கி லேனே!