உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நிரம்பிற்று


காடுமே டெல்லாம் நீடிக்
கடுகிப்புல் லார்ந்து வந்த
ஆடுமா டெல்லாம் நாடி
அடைப்பிடம் சேரக் கோழி
கூடுமூ டெல்லாம் கூடிக்
குஞ்சொடு குரல டங்கத்
தேடுமீ டெல்லாம் தேடித்
தீர்ந்ததன் றூரின் பாடே!

"சாவினில் வாழ்வி னில்தம்
சதமென நமைச்சார்ந் துள்ள
ஆவினம், அன்று மின்றும்
அரும்பெருஞ் செல்வம்! ஆன்றோர்
பாவினம் அடுத்த செல்வம்!
பரிவாக அவற்றைப் பார்த்துத்
தீவன மிட்டுக் கட்டித்
திளைத்திடச் செய்க, நண்பா!

காட்டுக்கு வேலி கோலிக்
காத்துழ வுரமி டாதார்,
பாட்டுக்குட் பட்ட கூலி
பாங்காகப் பகிர்ந்தி டாதார்,
மாட்டுக்கு மதர்த்துத் தின்ன
மறுதீனி போடா தார்,தம்
வீட்டுக்குத் துன்பம் நேர
வித்திட்டோ ராவா" ரென்றேன்.

"மாடொரு செல்வம்; மற்றிம்
மனையொரு செல்வம்; மன்னும்
காடொரு செல்வம்; காட்டின்
கவின்பயிர்ச் செல்வ மேனும்,
நாடொறும், வாழும் மக்கள்
நலமோர்ந்து நடக்கச் செய்யும்
ஏடொரு செல்வம்! ஏட்டை
இயற்றுவோ, ரெமது செல்வம்!