பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

137

எங்களுக் காக வேநீ
ரெழுதும் நூ லென்று முள்ளோர்
தங்களுக் காகித் தாழ்வைத்
தவிர்த்திடும் தமிழர் நாட்டில்!
திங்களு முங்கட் கொவ்வாத்
தேசீயச் செல்வம் நீரே!
உங்களைக் காப்ப தொன்றே
வுளத்திலுண் டின்றெங் கட்கே!

குறையொன்று மின்றி நீரிக்
குவலயத் தினிதி ருந்து
நிறையொன்று மரிய நூல்கள்
நேர்த்தியா யியற்றி யீயும்
முறையொன்று செய்தே னுங்கள்
முன்னனு மதிபெ றாதே!
‘இறையென்று வைத்தே மெங்கள்
இதயத்தி லுமையா" மென்றான்.

புகழ்ந்திட வில்லை, 'நீதான்
புரவலன் புலவர்க்' கென்றே ;
மகிழ்ந்திட வில்லை, மற்றிம்
மகத்தான சொற்கள் கேட்டும்!
இகழ்ந்திட வில்லை, ‘ஏற்கேன்
இந்தவுன் னுதவி' யென்றும்!
திகழ்ந்தி... அன்றென் நெஞ்சு
திறந்திது செப்பித் தீர்த்தேன்:

"கயன்மிகு நதிக ளாகிக்
கால்வாயால் குளங்கள் கண்டு
வயன்மிகு மளவில் செந்நெல்
வாரியாய் வழங்கு மாறே,
புயன்மிக வுயர்ந்த குன்றில்
பொலிந்திடப் பொழிந்த' தென்னப்
பயன்மிகு பாடலால்நாம்
பண்பாட்டுப் பண்னை காண்போம்!