பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

ஒழுக்கமே அறம். இளமைக்கும் முதுமைக்குமாக இல்லறம் துறவறம்' என்று இரு கூறாக்கி வள்ளுவம் தொன்று தொட்டு அறநெறியைப் பறைசாற்றிக் கொண்டிருப்பது தமிழ் நாட்டில் தான்; தமிழ் மக்கள் அறிந்தொழுகுவதற்காகத் தான்.

தர்மம் ஏவ் அதோ அந்தி: தர்மோ-ரச்சதி ரச்சிதிக: என்று உபநிசத்தும் இதையே உபதேசம் செய்கிறது. தருமத்தை நீ கொன்றால் தருமம் உன்னைக் கொல்லுகிறது. 'தருமத்தை நீ காத்தால் தருமம் உன்னைக் காக்கிறது, என்பது இதன் பொருள். மேலும் இதனைச் சுருக்கித் தருமம் தலை காக்கும்’ என்று தமிழ் நாட்டுப் பட்டி தொட்டிகளெல்லாம் முழங்கிக் கொண்டிருந்ததையும் என் இளமைப் பருவத்தில் நான் அறிந்துளேன்.

ஆராய்ச்சி உண்மையான இந்த அரும் பெரும் சத்தியமும், அறமும் இன்று யார் அபகரித்து கொண்டனர் நம்மிடமுருந்து? யாரிடம் நாம் பறிகொடுத்தோம்?

சத்தியமும் அறமும் தன்னைத் தான் அறியும் நிலை: இவை மனிதனை தெய்வமாக்க வல்லவை: வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் உண்டாகக் காரணங்களானவை .

கீதை உபநிசத்துக்கு மாறாக சகுணப் பிரம்மம்' என்றும் நிர்குணப் பிரம்மம் என்றும் பேரிட்டு, பார்த்த சாரதி நின் பாதமே கதி’ என்று நம்மைப் பாடிப் பரவச் செய்கிறது. சத்தியஸ்ய சத்தியமான ஆன்மீகத்தை அடிமைப்படுத்துகிறது இதற்குப் பக்தி என்றும் பேரிடுகின்றது. 'பக்தி' என்ற சொல் அடிமை எனும் பொருள் தரும் சொல்! இட்டுக் கட்டிய சொல்; உபநிசத்தில் காணாத சொல்.

வேத வியாசன், உருவ வழிபாட்டிற்குக் காரணமாக, கீதையை பாரதத்தில் புகுத்துகிறான். உபநிசத்துக் கருத்துக்கு மாறாக, உலக விவகாரப் பாரமார்த்திக் உண்மைகளுக்கு மாறாகக் கூறிச் செல்கிறான் புனரபி ஜனனம் புனரபி மரணம்