பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

பண்ணாக நேர்ந்தால் நீயும்,
பாட்டாகித் தீர்வேன் நானும்!
கண்ணாக நேர்ந்தால் நீயும்,
கவினாகித் தீர்வேன் நானும்!
மண்ணாக நேர்ந்தால் நீயும்,
மலராகித் தீர்வேன் நானும்!
விண்ணாக நேர்ந்தால் நீ, நான்
வெய்யோனாய்த் தீர்வே" னென்றே!

"என்மனை யுறுஞ்செல் வத்தில்
ஏற்பவை யினிமே லுங்கள்
நன்மனை யுறுமிஃ துண்மை !
நலிவு நீத் திருந்து, நீங்கள்
வின்முனைக் கணைக ளென்ன,
விளம்பிடும் விளக்க மாம்நற்
சொன்முனை, இழந்த எங்கள்
சுயத்திறன் மீட்கு" மென்றான்.

நிரம்பிற்று வயிறும், நெஞ்சும்!
நினைவினி லிருந்த தெல்லாம்
உரம்பற்ற வுற்றார் காதில்
உயர்வுறப் பெய்தல் தீர்ந்து,
வரம்பற்ற சாந்தி யெய்தி
வயணமாய் விழிகள் மூடப்
பெரும்பற்றா யுறக்கம் பற்றிப்
பிணைத்திடப் படுத்தே னன்றே

ஊழையுப் பக்கங் காண
வுழைப்பவர்க் குரிய வூரில்,
கோழியும் விடிவு கூறிக்
கூவக்கேட் டெழுந்து சென்று
சாழையில் பரிக்குத் தீனி
சரிவரப் போட்டு வந்த
தோழனென் புறப்பாட் டிற்குத்
துணையாக லுற்றா னோர்ந்தே!