பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உளங்கொளக் கூறித் தெளிவித்தார் என்று பேசுகிறது சாந்தோக்கிய உபநிசத்து. இது இவ்வாறிருந்தும் ஒரு சாதாரணக் கிருஷ்ணனை வேதவியாசன் பரமாத்மாவாக்க வேண்டிய அத்தியா அவசியம்தான் என்ன? மக்கள் அந்த அளவுக்கு என்ன தவறு செய்தனர், ஜடத்தை வணங்க வைத்து இவ்வாறு தண்டனை யடையச் செய்வதற்கும்.

இந்த வேதவியாசரும் ஆச்சாரிமார்களும் யாராக வேனும் இருக்கட்டும். உபநிசத்துக் கருத்துகளுக்கு மாறாகப் பூதப் பிரேத வழிபாடுகளைக் கொண்டுவர இருந்த அவசியம் ஒன்று உபநிசத்துக்களுணர்த்தும் சத்தியத்தைப் (பிரம்மத்தை) புரிந்து கொள்ளாதவர் எனவேண்டும். இஃதன்றெனில் விப்பிரர்தம் வயிறு காயாதவாறு செய்த சூழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆம்! இவ்விரண்டி லொன்று உண்மையெனவே வேண்டும்.

இதை நிரூபிக்க, ஒரு மேற்கோள் இங்கு இன்றியமையாதது. ஓம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ண மேவா வசியஸ்தே. என்பது ஈசா வாஸ்யோப நிசத்தின் முதல் சூத்திரத்துக்கும் முதல் சூத்திரம். இதன் தமிழ் உரை: ஓம் அது பூர்ணம்; இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்து பூர்ணம் உதித்துள்ளது. பூர்ணத்தி லிருந்து பூர்ணத்தை எடுத்தும் பூர்ணமே எஞ்சி யுள்ளது என்பதாம்.

உரையாசியர் இதற்கு மேலும் ஒரு சிறிய அடிக்குறிப்பும் கொடுத்திருக்கிறார் (அத) அது-பிர்ம்மம்; (இதம்) இது-உலகம் பூரணமாகிய உலகத்தைக் காட்டிலும் புர்ணமான பிரம்ம பாவனையை அறிந்தால் பிரம்மமே எஞ்சியுள்ளது என்றும் பொருள் கொள்ளலாம், என்று.

என் உள்ளம் தெளிவுபட இது துளியும் உதவுமாறில்லை. இதற்கு மேலும் ஒரு குறிப்புரை. ' பூர்ணமே எஞ்சி நிற்கிறது - ஒரு பொருளினின்று ஒரு பகுதியை வேறுபடுத்தினால் எஞ்சிஏதோ , எண்ணங்கள் இங்கு தாறுமாறாக வெளிப்படுத்தபட்டுள்ளது. தெளிவுயில்லாதா இதை ஏன் வெளியிடவேண்டும் ?