பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

சொற்கள் வெற்றிடமின்றி நிறைந்து கிடந்த என் இதயத்தில் அப்போது ஏற்பட்ட என் உள்ளுணர்வை வெளிப்படுத்துவதற்கேற்ற சொற்கள் காணாத நிலையில் நான் தயங்கினேன், தவித்தேன் என்று தான் கூறவேண்டும். ஆம்! அற்புதம் இது.

காலம், பருவம், இயக்கம், அதி பூத, அதி (சக்தி) தெய்வ, ஒட்டுறவுகளிலிருந்து தோன்றும், உடலுமுயிரும்மாகிய அதியாத்மப் பிறப்பு இயங்குதிணை நிலைத்திணையெனவுள்ள அனைத்துச் சீவராசிகளின் தோற்றம் தம்மைத் தாமே படைத்துக் கொள்கின்றன; காத்துக் கொள்கின்றன; எந்த ஒரு கடவுளின் தலையீடும் இதில் இல்லை என்ற பேருண்மையும் இதிலிருந்து தெளிவுற்றது.

உயிர் வருக்கத்தின் பிறப்பு, வாழ்வு, இறப்பு நிலைபாடுகளின் உண்மை இதுவாயிருக்க உபநிசத்துக்களின் தமிழ்உரையாசிரியர் இதையுணராமல் ஏன் வானையும் நிலத்தையும் இணைத்துக் காட்ட வேண்டும்? மூதறிஞர் ராஜாஜி ஏன் பரம் பொருளையும் கணித சித்தாந்தத்தையும் இழுத்து முடி போட்டுக் காட்டவேண்டும்?

ஒன்று மக்களைத் திசைமாற்றும் மனோ நிலை! இஃதன் றெனில், 'காணா தான் காட்டுவான் தான் காணான்' என்னும் குறட்பாவுக்கு இவர்கள் சரியான எடுத்துக்காட்டு என்று தான் கொள்ளவேண்டும்.

ஆன்மிக நிலை, அச்சமற்ற நிலை மிகமிக உன்னதமான நிலை! 'ஆத்மார்த்தே ப்ரதிவீர் தியஜெத் - ஆத்மாவுக்காக ஒருவன் தன்னைத் துறக்கவும் துணிகிறான்; உண்மையான ஆன்மிக வாழ்வு உருவ வழிபாடு செய்வதன்று; தொழுவதும் தோத்திரம் செய்வதுமன்று. எல்லாம் வல்ல - எல்லாமும் ஆன சத்தியத்தில் இரண்டறக் கலந்து விடுவதுதான். பிரம்மத்தை அறிந்ததன் பிரம்மமாகிறான்' என்கிறது பிரு. உப நிசத்து

சகுணப் பிரம்ம (விக்கிரக) ஆராதனை செய்பவர்கள், ‘அஜ்ஞானமாகிய இருளில் ஆழ்பவர்கள்; அசுர சுபாவ-