பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

நிசத்தோ என்னைப் போன்றவர் கற்றுத் தெளிய வேண்டி இந்தியாவின் இதய ஒலியாக்கி வெளிப்படுத்தியிருப்பார் என்று என் இதயம் எண்ணி மகிழ்ந்தது.

ஆனால், ஏமாந்தது. அவர் பேராசிரியராகவும், உலகத்திலுள்ள அனைவரும் மாணவர்களாகவும் கருதித்தான் அவருடைய கருத்துக்கள் அதில் ஒலித்தன.

'ஸ்ரீகிருஷ்ண பகவான், புத்தபகவான், நபி நாயகம் இயேசு கிருஸ்து என்றும், பகவத்கீதை, திரிபிடகம், குர்ரான், பைபிள் என்றும் எடுத்துக் கொண்டு பாடம் நடத்துகிறார் இவர். இவரளவு இல்லையெனினும் நானும், என்னைப் போன்றுள்ள இன்னும் பலரும் இவர்களைப்பற்றியும் இந்த மத நூல்களைப்பற்றியும் ஓரளவு தெரிந்தவர்களே ஆவோம்.

ஆகவே, இந்தியாவின் மிகப் பிரபலமாக ஒலித்த இந்த இதய ஒலியை என்னால் ரசிக்க இயலவில்லை. இதற்கு நேர் மாறாக ‘விளிப்புணர்வு பற்றிய விளக்கங்கள்' என்ற நூல் கிடைத்தது. ஜே. கிருஷ்ண மூர்த்தியின் சொற்பொழிவுகளை அடிப்படையாகக் கொண்டது இது. இவர் கூறுகிறார்:

'எவ்வளவு தான் கல்வியறிவு பெற்ற பெரும் அறிவாளியாகத் திகழ்ந்தாலும் தன்னைத் தான் அறியாத ஒருவன் அறிவற்ற முட்டாளே ஆவான். தன்னைத்தானே அறிந்து கொள்வதுதான் கல்வியின் நோக்கமாகும். பகவத்கீதையையோ, உபநிடதத்தையோ திருக்குரானையோ, பைபிளையோ ஒருவர் மேற்கோள் காட்டலாமெனினும் அவர் தன்னைத்தான் அறிந்து கொள்ளவில்லையெனின் அது கிளி ஒன்று சொன்னதைத் திருப்பித் திருப்பிச் சொல்வதை ஒக்கும். ஆனால், ஒருவர் தன்னைப்பற்றிக் கொஞ்சமேனும் அறிந்திருப்பாரானால் அங்கே அபாரமான புதிதாய்ப் படைக்கும் செயற்பாடு திகழ்கிறது.

'சிறியதில் பெரியது அடங்காது; தனி ஒருவன், கட்டுண்டு துயரத்தில் மூழ்கி, தோல்வியுற்ற ஒரு அற்ப ஆசாமி