பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

இருக்க வேண்டாம். உண்மைக்காக வாழ்ந்த வாழ்வாக - அமர வாழ்வாக அது அமையட்டும். நாடு கீழ் நோக்கி வழி தவறிச் சென்று கொண்டிருக்கிறது.

ஆம்! நாமும், நம் சந்ததிகளும் இருளிலிருந்து ஒளிக்கு, அசத்திலிருந்து சத்துக்கு, தூக்கத்திலிருந்து விழிப்புக்கு வழி கண்டு வந்து தீரவேண்டும்.

ஆன்மிகமே தெய்வம்; ஆத்மாவே ஆண்டவன்; 'திக் பலம் சத்திரிய பலம்; பிரம்ம தேசோ பலம், பலம்! என்பது ரிசிவாக்கு. ஒரு அரசனது சதுரங்க பலம் மிகச்சிறிய அளவு நிலத்தை வெல்ல வல்லது. பிரம்மதேஜஸ்-ஆன்மீகப் புகழ் பலம் தான் உண்மையான பலம்; இது இந்த அகிலத்தையே வெல்ல வல்லது.

இறுதியாக ஐந்து சிறிய வார்த்தைகள் அக் நிர்மே வாசி ச்ருத; வாக் இருதயே. இருதயம்மயி; அகம் அமிர்தே; அமிர்தம் பிரம்மணி;- (உள்ளத்தில் உண்மை உளதாயின்) என் வாக்கு ஒளிமயமானது; வாக்கு இருதயத்தில்; இருதயம் என் உடலிற்குள்; (உடலும் உயிருமாக உள்ள) நான் அமிர்தத்தில்; அமிர்தம் பிரம்மத்தில்!

நமக்கும் பிரம்மத்துக்கும் உள்ள தொடர்பு இது. நம் எதிர்கால மக்களின் உளத்தில் நாம் ஏற்றி வைக்க வேண்டிய திருவிளக்கு இது; நாம் அறியத் தவறியது இது; நமக்கு அறிவிக்காமல் ஆரியரால் மறைக்கப்பட்டது இது! 'பாருக்குள் ஏது இதுபோலொரு நூலே' என்ற சொல்லை உண்டாக்கியது இது. 'அகம் பிரம்மாஸ்மி- நானே பிரம்மமாயுள்ளேன் என்ற சொல்லின் பொருள் இது. தெய்வத்தை அறிந்து அடைந்த நிலை இது.

பிரம்மத்தை அறிந்தவன்- பிராமணன்; ஆத்மாவை அறிந்தவன் அத்திகன். ஆத்மா, பிரம்மம் கடவுள் என்பன ஒரு பொருள் பல சொல். பிறப்பினால் எவனும் பிராமணனாக