பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

எல்லையே யில்லா தெங்கும்
ஏற்புறக் கமழும் நல்ல
முல்லையை முனைந்து கோக்கும்
முறையறி வினைஞ னாய்நா
னல்லையே பகல்செய் தென்ன
அவனியி லொளிர வைப்பேன்,
'இல்லையிந் நூலுக் கொப்பிட்
டியம்புதற் கினியொன்' றென்றே!

சென்றுய ரிமயத் துச்சி
சேர்பவன் செயல்பட் டாங்கே,
ஒன்றிய வுளத்தி னோனா
யொதுங்கிய துணரா வூரார்,
மன்றிய லோரான்; மக்கள்
மாண்போரா' னெனுஞ்சொ லென்னைக்
குன்றியாய்க் குறைக்க வுற்றும்,
தமையாம லமைதி கொண்டேன்.

'எப்பற்று மிலரா யொன்றி
யியல்புட னிருமை யாய்ந்து
துப்புற்றுத் துலக்கு வோர்தாம்
தொழத்தகுந் தூயோ' ரென்று
செப்புற்ற செஞ்சொல் தின்று
சிந்தையிற் செரிக்கா தார்க்குத்
தப்புற்ற தறியச் செய்து
தடங்காட்டும் தக்கோர் தான் யார்?

சுருக்கமா யுரைக்குங் கால்தம்
சுய நலம் குறிக்கோ ளாகிச்
செருக்கினைப் பெருக்கும் செல்வம்
சேர்த்திடும் செயலே செய்து
தருக்கரா யிருப்போர் தம்சொல்
தள்ளியே தனித்துத் தங்கி
யுருக்கமா யொன்றி னேன், நான்
உண்மைக்குப் புறமா காதே!