பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இலம்பாடு
குடதிசை மறைந்த வெய்யோன்
குண திசை பிறந்தும் கூட
வடதிசை வைகி டாதும் ,
வழுவித்தென் திசைவ ராதும்
நடுதிசை நடந்த தொத்து
நல்குர வெம்மை நாளும்
கெடுதிசெய் தெரித்த துண்னக்
கேள்வர கும்கிட் டாதே!

மாரியெய் தாத பாரும்
மாட்சியெய் தாத பேரும்
ஏரியெய் தாத வூரும்
ஏற்றமெய் தாத வாறே ,
சீரையெய் தாதார்க் கில்லை
சிறப்பென்ப தறிந்து மென்மான்
நேரமெய் தாமுன் நின்று
நெஞ்சழிந் துதிர்த்தாள் கண்ணீர்!

சாணுக்கு முழத்தைச் சார்த்தின்
சரிபாதி யாதல் சான்றாய் ,
ஆணுக்கும் பெண்ணுக் கும்ஆண்
டைந்து,பத் தான எங்கள்
மாணிக்க மனைய மக்கள்
மனம்மாழ்கி மகிழ்ச்சி மாய்ந்தாங்
கூணுக்கு முடைக்கு முள்ளம்
உடைந்துருக் குலைந்தா ரூர்க்குள்

பழங்காலப் பாவல் லார்க்குப்
பாரி , ஆய், காரி, ஒரி,
மழுங்காம லளித்துக் காத்து
மாண்புற்ற மண்ணி லின்று
முழங்காலிற் சுமையை முக்கி
மூச்சொடு தூக்கு வோனொத்
தழுங்கால மாகி வந்தின்
றறிஞனில் புகலா யிற்றே!