பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35



'நல்லவ ரெனவே யாரும்
நாட்டிலின் றில்லை' யென்று
சொல்லுவ தொல்லா தன்றோ?
சுவருக்காம் மண்சோ தித்துக்
கல்லுவோன், கனவில் கூடக்
காணாத புதையல் கண்டு
புல்லுவோ னாயின் போற்றிப்
பூசிக்கப் படுவ துண்டே!

இடியென இயங்கி மின்னி
யிலங்கும்வான் முகில்பெய் தாலிப்
படியினைப் பசுமை போர்த்துப்
பல்வேறு வடிவு வண்ணச்
செடியெனத் தோன்றும்; சென்று
சிரத்தையாய்த் தேடச் செய்தால்,
இடையினிற் 'றுளசி' யொன்றங்
கினிமையாய்க் கமழ்வ துண்டே!

பருப்பில்லா, அரிசி யில்லாப்
பகலிலும் பகையில் லாதாள்,
வரப்பில்லா, வாய்க்கா லில்லா
வயலிலே பயிராய் வாடிச்
சிரிப்பில்லா முகத்தின் முன்னென்
சிந்தையைத் திறந்து காட்டி,
விருப்பில்லா துரைத்த சொல் 'நான்
வேற்றுார்போய் வருவே' னென்றே.

மூச்சொன்றக் கேட்டா ளிச்சொல்;
முகஞ்சிறுத் துறுக ணுற்றுப்
பேச்சின்றிப் பீதி யெய்திப்
'பெண்மையி னியல்பிஃ' தென்ன
மீச்சென்ற புதர்மேல் பெய்து
மிஞ்சிய மழைநீர் காற்றின்
வீச்சொன்றச் சிந்திற் றென்ன
விழிநீரை வழிய விட்டாள்.