பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

'நற்றிணை புறநா னூறே
தலந்தரத் தக்க' தென்னும்
சொற்றுணை கொண்டு நானும்
சுதந்திரத் தமிழர் வாழூர்,-
விற்றுணை கொண்டு வீரன்
வீட்டைவிட் டேக லொத்தென்
இற்றுணை யின்றி விட்டின்
றேகிடற் கெண்ணு கின்றேன்.

அஞ்சிய பெடைய ழுங்கால்,
அகலன்றி லாய்நா னாற்றி
வஞ்சியை விட்டுச் செல்லும்
வருத்தமே வரவாய் வந்திங்
கெஞ்சிய இரவே எங்கோ
ஏகிடல் செலவா யெண்ணித்
துஞ்சிய பொமுதும் நெஞ்சைத்
துன்பமாய்த் துளைத்த தன்றே.