பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

"கார் நிலை யற்று, வானம்
காய்கின்ற காலத் தேரி
நீர் நிலை யற்று நின்ற
நெய் தலாய் நமது மக்கள்
சீர் நிலை யற்றுச் சேர்ந்து
சிந்துங்கண் ணீர்கா ணாநீர்,
பார் நிலை பற்றிப் பாடும்
பாட்டைப்பா ராட்டா"... ரென்றே,

குவளையில் மதுகூர்ந் தென்னக்
கோலங்கொள் விழி நீர் கொள்ளப்
பவளத்தில் படிந்த முத்தாய்ப்
பல்லிதழ் பதியப் பாவம்! -
எவளையென் னிதயத் தேற்றி
எழில்விளக் கெனவைத் தேனோ
அவ்ளையே றிட்டுப் பார்த்தென்
அகமனல் மெழுகா யிற்றே!

பன்னூறு வண்ணப் பூக்கள்
பயனார்ந்த மணிவண் டாய்நான்,
மின்னேறு போன்றென் நெஞ்சில்
மேலாண்மை மேவப் பெற்றேன்;
'முன்னேற முடியு மென்று
மொழிகின்றேன்; முறையோ ராதார்
சொன்னூறு சிந்தி னும்,நீ
சுயத்தன்மை யிழந்தி டாதே!

அகிலாகிக் கமழாக் கூந்தல்
அமிழ்தே!யுன் அகத்தை யாற்று!
பகலாகி யுளத்திப் பாரில்
பாதி நாள்! பைந்த மிழ்பா
புகலாகி யுளது! போற்றிப்
பொருளீவோ ருளர்!நான் போய்ப்பொன்
முகிலாகி வருவேன், துன்பம்
முழுவதும் தவிர்த்தற் கென்றேன்