பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

தேக்காகத் திமிசே யாகத்
தெளிந்த நன் மரத்தைத் தேடிப்
போக்காகப் பொருத்தின் குந்திப்
பொம்மைகள், பொலியச் செய்து,
சோக்காகச் ‘சிவன்மா லெ'ன்று
சொல்லியே விற்போ னொப்ப,
வாக்காகச் சொற்கள் கோத்து
வண்டமிழ் கவிதை யாத்தே,

உழுதலைத் தவிர்த்து விட்டோ
ரூழவனு முழைப்பி லுற்ற
வழுதலைப் பறித்துச் சென்று
வாணிகம் செய்வ தொப்ப,
எழுதலைத் தவிர்த்து நானின்
நேகுவே னினிநீ யிங்கே
அழுதலைத் தவிர்த்து மக்கள்
அகங்காத்துக் கொண்டி ரெ"ன்றேன்.

எச்சுக்கு மட்டு மென்றும்
இடங்கொடா எழில ணங்கென்
பேச்சுக்கு மறுபேச் சின்றிப்
பெரிதோர்ந்து கேட்ட பின்பு,
நீச்சுக்குப் போதா நீரில்
நிலைமாறி வீழ்ந்தெ ழுந்'திம்
மூச்சுக்குப் பழுதின்' றென்று
மொழி தலாய் முறுவ லித்தாள்.

சுகத்தினை மலர்த்த வுள்ள
சுடர்க்கொடி சோகம் நீங்கி
முகத்தினை மலர்த்திப் பூத்த
முறுவலை யுண்டு நானென்
அகத்தினை மலர்த்த, ஆரா
அன்பினுக் குரிய ராயெம்
மிகத்தினி லுதித்த மக்கள்
எழில்முகம் மலர்ந்த தன்றே