பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தலைக்கொள்ளி'யோகரா யும்மைச் செய்வ
தூழ்வினை' யெனவே வோதி.
மூகராய் நம்மை மாற்றும்
மூர்த்திகள் தமையுண் டாக்கிப்
'போகராய்ப் பொலிய வேண்டின்
பூசிப்பீ’ ரெனப்போ திக்கும்
நாகரா சய்ய னால்நான்,
நாத்திகப் பட்டம் பெற்றேன்.

நாட்டிலே நலம் நா டாத
நாகரா சன்வந் தின்று,
'கேட்டிலே கேடுண் டாக்கும்
கெட்டநாள் நவமி' யென்னக்
காட்டிலே கடுவாய்க் கூவல்
காதுற்ற புல்வா யாயென்
கூட்டிலே வுயிரா னாள்: 'ஓ
கொடுமையே! அந்தோ!' என்றாள்.

"ஆரணங் காகி வந்தென்
அகங்கொண்ட அன்பே! அஞ்சேல்;
தோரணந் துலங்கக் கட்டித்
தூமலர் துாவித் தொக்குப்
பூரண கும்பங் கொண்டு
போற்றினும், பொய்மெய் யாமோ?
'காரண மின்றி யென்றும்
காரிய மில்லை' கண்ணே!

மெய்யர்தாம் மேவு மூரில்
மேம்பாடு மிஞ்சும்; மீறிப்
பொய்யர்தாம் புகுந்த வூரில்
பொல்லாங்கு மிஞ்சும்; போதத்
துய்யர்தாம் தோன்று மூரில்
தோழமை மிஞ்சும்; தோதாய்
அய்யர்தா மடைந்த வூரில்
அறியாமை மிஞ்சிற்" றென்றேன்.