பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50'பணங்கூட வில்லை யப்பா!
பாங்கற்ற பருவம்; பார்த்தால்
மனங்கூடத் தொல்லை' யென்று
மறுத்தும்,கை மாற்று செய்து
'குணங்கூடும் முல்லை சான்ற
குலமகள்; கொள்க! கோரும்
கணங்கூடுங் கால' மென்றென்
கல்யாணம் முடித்தா ரப்பா!

ஆனது நன்றென் றோமற்
றன்றென்றோ நவிலா தின்று
கானது கடந்து செல்லுங்
கலைமானாய்க் கலங்கிக் காலம்
போனது பற்றி யுள்ளம்
புழுங்கிடப் போவேன், போதின்
தேனது தெவிட்டும் போதும்
தெவிட்டாத தமிழும் தேர்ந்தே!

புரக்குங்கை யொன்றன் றென்னைப்
புகழ்ந்துபொன் தந்த போதும்.
'இரக்குங்கை யாகா தென்கை
யீயுங்கை' யென்றேன் நின்று.
சுருக்குங்கை யாகிச் சொந்தச்
சுகுமாரி சோகம் தீர்த்தற்
கிருக்குங்கை யிடுங்கைக் குக்கீ
ழேற்குங்கை யாயிற் றின்றே!

நூலாய்ந்து நுவலும் போதும்,
நுவன்றதை யெழுதும் போதும்,
மேலோய்ந்தும் மிடுக்கோ யாத
மேதகு மிதயம் மேவிச்
சேலாய்ந்து கொண்ட கண்ணென்
சிற்பத்தின் சிறுமை தீர்க்கக்
காலோய்ந்து நோகச் சென்றென்.
கையேந்த லாயிற் றன்றோ!