பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57



அமுதென இனிக்கு முங்கள்
அருந்தமிழ்க் கவிதை மூலம்
சமதர்ம மதனைக் கேட்டுச்
சரிவர அறியு மாவல்!
எமதருஞ் சுற்றம் சூழ
இருந்துநீ ரியம்பற் கின்றே
வுமதுளங் கனிந்தெம் மூருக்
குவந்தெழுந் தருள்க’ வென்றான்.

புன்சொல்லைப் புடைத்தொ துக்கிப்
புவியினைப் பொலிவிக் கின்ற
நன்சொல்லை நாடிக் கொள்ளும்
நல்லவன்; நவிலா நின்ற
தன்சொல்லின் தரம்தாழ்த் தாத
தமிழ்மகன் தனைநா னின்றிங்
கென்சொல்லி வாழ்த்த லென்றே
எண்ணினே னிறும்பூ துற்றே!

'சங்ககா லத்து நூல்கள்
சங்கநூ லெ’ ன்ப தொப்ப,
அங்கங்கட் கழகுண் டாக்கும்
அணிகல னாக்கற் கின்றிப்
புங்கனுார்த் தெருவில் வீழ்ந்து
புழுதியிற் கிடந்த போதும்,
தங்கமென் றால்தங் கம்தான்
தரமதில் தாழ்ந்தி டாதே!

தாடியும் முடியும் தாங்கித்
தவசியின் தரமாய்த் தக்க
நாடியே நயக்கப் பாடும்
நலமுறு தமிழின் மாட்சி,-
தேடியே கால்கள் தேயத்
திரிந்தநன் மருந்து வீடு
கூடியே காண்ப தொக்குங்
கோலமா யிருந்த தன்றே!