பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58


'தப்பறத் தாழ்வு நீங்கத்
தமிழாய்ந்து தறுகண் தாங்கி
ஒப்பற, வுண்மை யோர்ந்துன்
உளமொளி வயிர மாக!
செப்புறி னெனது சிந்தைச்
சிக்கறச் சென்று சேரும்
துப்புறு முனது பேரூர்
துலக்குக தூயோ யென்றேன்.

ஒண்டுறை யுதித்த லர்ந்த
ஒள்ளிய நளினத் தேறல்
உண்டுறை வண்டு போல் நா
னுமதரும் கவிதை யோர்வேன்;
கொண்டுறை கிறவெம் மூர்,பேர்
குறிப்பெலாம் கூறு வேன்; நீர்
திண்டுறை வண்டி யேறத்
திருவுளம் கொள்க! என்றான்.

உனையழைத் தோரே னூர்பேர்
உணரேன்; மற் றுரையா டாதேன்,
பனையழைத் 'துன்வீ டன்றில்!
பரிந்துவந் திரு'வெ னல்போல்,
தினையழைத் 'தெனை நீ கொய்து
தின்னுக கிளி! 'யெ னல்போல்,
எனையழைத் தேக நீயின்
றியம்புவ தேற்கு மென்றே,

உருளுமவ் வண்டிக் குள்நான்
உட்கார வுவந்து ரைத்தான்;
இருளுமப் பொழுதங் கேற்க
இருந்த நற் பொருள் கண் டுள்ளம்
மருளுமோர் மகவும் கொள்ள
மாதாவை யழைப்ப தொப்ப,
அருளுமவ் வனைத்தும் நீரெம்
மகத்திருந் தளித்தற்' கென்றன்.