பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60


வில்லெனும் புருவம்; வெற்றி
வேலெனும் விழி;வெய் யோன்வீழ்ந்
தல்லெனும் குழல்;நன் முல்லை
யரும்பெனும் பல்,மா னன்னார்,
'கல்’லெனச் சிரித்துத் தம்செங்
காந்தள்கை விரல்கொண் டிங்கே
'நில்' லென நட்ட பேரேன்
நீக்கினி' ரெனும், நெல் நின்றே!

'புரவுள்ளிப் புழங்கும் காலம்
போயிற்று; பொய்மை போற்றி
வரவுள்ளி வாழும் காலம்
வசதியாய் வாய்த்த தென்றே,
கரவுள்ளிக் கழங்கம் பூண்டார்
கண்படக் கூடா தென் றம்
மரவள்ளிக் கிழங்கும் மண்ணில்
மறைந்தன போலு மங்கே!

'துரும்புநீ! பூத்துக் காய்க்காய் !
'தூ'வெனத் துாற்றி னும்.நான்
விரும்பவே மாட்டே னிந்த
வில்வம்போல் வீணய் வாழ!
அரும்பியு மனியா காப்பொன்
னரளியைப் போலும் வாழேன்;
கரும்பு.நா னிரும்பா லென்னைக்
கசக்கினு மினிப்பே னென்னும்!

'கருத்துமாய்க் கண்ணுய்க் காத்துக்
காலமோர்ந் துழுது நட்டுத்
திருத்தமாய்க் களையும் தீர்த்துத்
திளேக்க நீர் பாய்த்துத் தீனன்,
பருத்தியாய் விளைத் தான்; பாவி,
பனம்பண் ணிக் கொழுத்தா னென்றே
வருத்தமாய்க் காகா வென்றார்
வாயசம் வைத தங்கே !