பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63


ஊருக்கென் றுதவ வொட்டி
யுள்ளதோர் குள்ள ஏரி!
பேருக்கஃ தேரி; வேறு
பேறுபெற் றறியா வாறே.
காருக்குக் கோபம் மூண்டு,
கண்கெட மின்னிப் பெய்யும்
நீருக்கோ ரிரவு நேர்ந்து,
நிலமாகும் மறுநாள் போதே!

நீரோடு நிழலும் நேர்ந்து
நிலைத்திட நெடுநாள் தொட்டெம்
மூரோடு முறவா யுள்ளோர்க்
குவகையுண் டாக்கற் குற்ற
நேரேடு, கொய்யா அத்தி -
நினைக்கநா நீர்சு ரக்கும்
சிரோடு, சோலை யென்றும்
செப்புதற் கொன்றுண் டங்கே!

'உன்செய லென்று ரைத்தற்
கொன்றுமிங் கில்லை சாமி!
என்செய லன்றி யென்ன
ஏரெரு தெல்லா மீட்டி ,
வன் செயல் புரியார் வைகி
வாழ்வொன்றி வாழு மூரில்
புன்செயே வளது , சுற்றிப்
புகராடை புனைந்த தொத்தே!

ஆடில்லா அகமொன் றில்லை;
அழகான காளை, கன்று ,
மாடில்லா மனையொன் றில்லை:
மயக்கறக் கூவும் கோழிக்
கூடில்லாக் குடிலொன் றில்லை;
குறையில்லா திருந்தும், கொள்ளும்
ஏடில்லா வீடா யென்றும்
இசையில்லா துள தெம் மூரே!