பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64


கவருத லறியார் ; விணாய்க்
காலமும் கழியார்; காட்டில்
துவரையை விளைவித் துத்தம்
துணிைவினைத் துலக்கு வோராய் ,
அவரையை விளைவித் துத்தம்
ஆற்றலை அறிவிப் போராய்--
எவரையு மெளிதில் நம்பும்
இயல்பின ரெம்மூ ராரே !

இல்வண்ண மிலங்கச் செய்ய
இருக்கின்ற புன்செய்க் காட்டில்,
சொல்வண்ண மெனவே சோளம்
சுவர்ணம்போல் விளைந்த தாயின் ,
நல்வண்ண மரைத்து நாளும்
நாமதைக் களிசெய் துண் டால்
கல்வண்ன மாகும் மேனி;
கனி வண்ன மாகும் ஞானம்!

மருந்தென வுணவ ருந்த
மறுப்பவர், மற்றம் மண்ணின்
கருந்தினை யாய்ந்து குற்றிக்
காரிகை கைப்பாங் காக,
'விருந்தெ'ன வந்தோர்க் கென்று
விடியல்சிற் றுண்டி செய்தஃ
தருந்திடப் படைத்தா லார்வுற்
றமிர்தமென் றுண்பா ரையா!

கொங்குறை குன்றாய்க் குன்று
கொண்டுறை யூரா யூரில்
செங்கதி ரொளியைச் செய்யச்
செறிமுகில் துளியைச் செய்யச்
சங்கையை மட்டும் - சாமி,
சமயத்தி -லறச்செய் யாத
லிங்கைய னையா என்பே
ரிலங்குவே னினிச்செய் தென்றான்.