பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வியப்பு


கருத்தலை யொலிக்கும் கன்னிக்
கடல் தமிழ் குளித்துக் கற்றோர்,
தெரித்தலைத் தெளிந்து முத்தாய்த்
தேடுவர்; இவனைத் தேரின்,
வருத்தலைப் பற்றி யெண்ணு
வாய்மையன்; வயிரம் வாரிப்
பொருத்தலைப் புரிவான் போலும்,
பொன் மனச் செம்மல் போன்றே!

'உனதென வுளத்திற் கொண்டிவ்
வுலகில் நீ யு யர்க” வென்றே
தனது தாய் தரிக்கத் தந்த
தறுகணும் தயவும் தள்ளி,
மனிதனை மனிதன் மாய்க்கும்
மார்க்கத்தில், மாண்பு மிக்க
புனிதனைக் கண்டென் னுள்ளம்
புலரியாய்ப் பொலிந்த தன்றே!

உள்ளுவ தெல்லா மூரின்
உயர்வுக்கா யுள்ளு வோனைத்
தெள்ளிய தமிழில் தேனாய்த்
திருக்குற ளியற்றித் தந்த
வள்ளுவ னிருந்தில் வாறோர்
வாய்ப்புறின் வாழ்த்தி, 'வா' வென்
றள்ளியே யனைத்துக் கொள்வா
'னரு மந்த மகன் நீ' யென்றே!

'பாருண்டு; பதிபாங் குண்டு;
பாட்டாளி மக்க ளுண்டு;
நீருண்டு நிலமுண் டேனும்
நெஞ்சு நேர்நிலையில் லாமல் ,
பேருண்டு பண்ணுங் கொல்லோ
பேதமை பெருகிப் பேராப்
போருண்டு பண்ணுங் கொல்லோ-
பொருளுண்டு பண்ணு வோர்க்கே!