இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
67
சாற்றவே, செவியை யச்சொல்
சாருமுன் கண்ணுரர் சார்ந்தே,
ஆற்றவே இயலா வாறென்
னகமுறும் வறுமை நோயை
மாற்றவே வந்து வாய்த்த
மருந்தென மனமு. மெண்ணப்
'போற்றவே பொலிக! நும்மூர்
புகழோங்கிப் பூப்போ' லென்றேன்.
'விண்ணைவிட் டகல்வேன், வண்டே!
விடியல் காண் பளவும் வீற்றுத்
திண்ணைவிட் டகலா தென்றன்
தேவிசெங் கமலம் தேரப்
பண்ணைவிட் டகலாப் பாடல்
பாடுக பரிந்தெ' என் பான்போல்,
கண்ணைவிட் டகலும் வெய்யோன்
கவின்மலைத் தலைக்கண் நின்றான்.