பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

சத்தியத்தின் சக்தி பெரிது. நெருப்பு எரிந்தவிந்து தணலாய் சாம்பல் முடியநிலையிலும் அதன் சுடும் தன்மை இருப்பதியல்பே யன்றே? இன்றும் அது அவ்வாறேே பசிக்கொண்டுதானுள்ளது.

கள்ளத் தனத்தை உள்ளத்தில் ஒளித்துக் கொண்டுள்ள இரஜசும், கழுத்தறுப்புக்குக் கைக்கூலி வாங்கும் தமசும் அசட்டுத் தனமும் அச்சமுமாகி ஒரு நாள் வந்து சத்தியத்தைச் சந்தித்தன; 'எல்லாம் வல்ல சத்தியமே உனக்கு வெற்றி உண்டாகுக!' என்று கூறி வணக்கம் செய்தன. 'சாத்விகத்தை நேசிப்பதுபோல் கருணை கூர்ந்து எங்களையும் நேசிக்க வேண்டும் என வினயமாக வேண்டிக் கொண்டன. உடல்நலம் ஒன்றே பேணி உளநலம் அறவே அற்ற அவையிரண்டும் சத்தியத்தை நோக்கிக் கெஞ்சுங்குரலில் மேலும் ஒருவரம் அருளுமாறும் யாசித்தன; தெய்வமே ஆன சத்தியமே! எங்கள் உள்ளங்களில் உன்னை நிரந்தரமாக வைத்துப் போற்றிக் கொண்டிருக்க இயலவில்லே; எங்கள் மனம், அறிவுரத்தைப் போதுமான அளவு ஏனோ பற்றிக் கொள்ள மறுக்கிறது. மனது செம்மைப்படாத இடத்தில் தெய்வமாகிய நீ குடி கொள்ள மாட்டாய் என்றும் நாட்டில் வதந்தி. எங்களுக்குப் பிறப்பும் இறப்பும், வாழ்வின் பயனும் பற்றித்தெளிவுற யாரும் விளக்கவே இல்லை. ஆசைப்பட்டதை அடைந்து அனுபவிக்க முயல்கிருேம் கூடவே இன்னவெனத் தெரியாத கவலைகள்,நோய்கள் எம்மை ஆட்கொள்ளுகின்றன; அச்சத்திற்குள்ளாகிருேம். எங்கள் வாழ்வே இருள்மயமாக உள்ளது. ஆனதன் காரணமாய் உன்னை ஊர்ப்பொது இடத்தில் வைத்துப் பூசிக்க விரும்புகிறோம். இவ்வாறு செய்ய மேலான உன் அனுமதி எங்களுக்குத் தேவைப்படுகிறது என்று கசிந்துருகிக்கண்ணிர் மல்க நின்று கை கூப்பி வணங்கின.

எதார்த்தமான சத்தியம் இவ்வேண்டுகோளை ஏற்று இரக்கம் காட்டி 'ததாஸ்து' என்றது.

சத்தியம் எந்த ஒரு மனிதனுக்கும் சொந்தமானதன்று. அது உருவமுடையதும் அல்ல. அது அறிந்து அடைவது.