பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அறிமுகம்



ஊருற்ற குதிரை யுள்ளம்
உவப்புற்று நிற்க வூரார்,
'யாருற்ற' தென்றாங் குற்றார்க்
கறிமுகப் படுத்தி நண்பன்:
'பாருற்ற பருதி சாயப்
பரவும்பா ழிருட்டில், பைய
நேருற்ற பிறைபோல் நேயர்
தெஞ்சுற்ற கவிஞர்,' கண்டீர்!

'பாவலன் பாடா துள்ள
பாட்டும் பாழ் ; பாட்டைப் பன்னி
நாவலன் நவிலா துள்ள
நயமும் பாழ்; நலமாய் வாய்த்தும்
காவலன் காவா துள்ள
காடும் பாழ்; கட்டி யோட்டும்
ஏவலன் இல்லா துள்ள
ஏரும்பா' ழென்ருன், நண்பன்.

வலையோட்டி, வனத்தில் வாழும்
வனப்பான புள்ளி மேவும்
கலையீட்டி வரக்கண் டார்ப்போல்
களிப்புக்கோர் கரைகா ணாதே,
'நிலையூட்டி நெகிழ்ந்த நெஞ்சை
நேர்செய்யும் கவிஞ’ ரென்று
தலையாட்டி, வியப்புற் ருேராய்த்
தம்மைத்தாம் மறப்போ ரானார்!

"பாய் நாடிப் படுக்கப் பண்ணிப்
பலமெலாம் பறித்துக் கொள்ளும்
நோய் நாடி மருந்தும் தந்து
நோன்மைய ராக்க நோற்கும்
தாய் நாடி வரல்போல் வந்து
தமிழூட்டும் கவிஞர் தம்சொல்
வாய்நாடிப் பருக வாரீர்
வைகறை வண்டா" யென் றான்.