பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72"தாழையும், கமுகும் தங்கித்
தரித்திடா; தகைமை வாய்ந்த
வாழையும் வளரா தேனும்,
வஞ்சம் பொய் வழங்கா வூரில்,
'ஏழையும் கோழை யும் மற்
றில்லை' யென் றெண்ணு வோன் நான்:
ஊழையும் உப்பக் கங்கண்
டுழைப்பவ ருயர்வா" ரென்றேன்.

வயலாரும் வாழ்வி னோர்தாம்
வரவறி யாவூர் - வாவிக்
கயலாரும் கண்ணாள் கண்ணில்
கண்டது கருணை யாகிக்
குயிலாரும் குரலாள் கூற்றில்
கொண்டது குடிமை யாகி, -
அயலாரும் அயலு ராயும்'
அது என்தா யகமா யிற்றே!