பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கலப்படம்



பட்டியைப் பார்த்து நண்பன்,
பரிவாகப் பசுவைப் பார்த்துக்
கட்டிய கயிற்றைப் பார்த்துக்
காடியைப் பார்த்துக் கன்றுக்
குட்டியைப் பார்த்து விட்டுக்
குந்திப்பால் கறந்து வீட்டை
எட்டியே பார்த்து வைத்தான்,
எழிலணங் கெடுத்துப் பார்த்தாள்!

பாற்பட்ட கையைப் பையப்
பதமான வெந்நீர் கொண்டு
காற்பட்ட கறையும் நீங்கக்
கழுவினான்; கடலைக் காட்டில்
ஏற்பட்ட எதுவோ வொன்றை
ஏந்திழை யியம்பக் கேட்டான்;
மேற்பட்டென் னருகில் வந்து
மெதுவாக அமர்ந்தான் மேலோன்!

விளையாடி விட்டு வந்த
விடலை, தன்வேட்கை நீக்க
வளையாடுங் கையில் தாயார்,
வருக்கையி னினிய வாசக்
சுளையோடு நிற்கக் கண்டு
சுவைத்திட விழைவ தொப்பக்
களையோடு முகங்காண் பித்தான்,
காலத்தைக் கணித்த நண்பன்!

"பல்வகை யாய்நா மின்று
பாரிலே படைக்கும் செல்வம்,
நல்வகை யாகத் துய்க்க
நமக்காக வுள்ள தேனும்
கொல்வகைக் கேது வாகும்
கூடார்கண் கூடிக் கொண்டால்!
சொல்வகைக் கல்விச் செல்வம்

சோகச்சா வதைக்கா ணாதே!