பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

ஒப்புர வொன்ற நின்றென்
னுளங்கொளற் குரிய தோழா!
துப்பொரு துளியில் லோராய்த்
தொல்லைக்கா ளானோம்; தோன்றும்
'எப்பொரு ளெத்தன் மைத்தா
யிருப்பினும் இதய மொன்றி
அப்பொரு ளாராய்ந் துண்மை
யறிகெ'னு மறிவோ ராதே!

‘பிறப்பிப்பான், நம்மைப் பேணிப்
பெருகவே காப்பான்; பின்னர்
இறப்பிப்பா னிறைவ' னென்றே,
இடைவிடா தினிக்கப் பேசிச்
சிறப்பிப்பான்; செம்மைப் பட்ட
சிந்தனைத் திறன்தே ராது
மறப்பிப்பா னவனால் தான்நாம்
மாண்பிலா மனித ரானோம்!

‘இம்மையே மறுமை யே' என்
றிருந்துவாழ்ந் தியங்கற் கேற்பத்
தம்மையே தாமீன் றுய்யும்
தன்மைத்தாய், - மக்கட்க் கெல்லாம்,
அம்மைமற் றப்பன் மூலம்
ஆவதை யறியார், நம்மைப்
பொம்மையைப் போற்ற வைத்துப்
புத்தியைப் புதைக்கச் செய்தார்!

ஆயிரங் காலந் தொட்டோ
ரவரையே, அழியா தின்றும்
மாயிரு ஞாலத் தின்மேல்
மன்னிவாழ் வதனை யாய்ந்தால்,
தாயருந் தந்தை யும்தாம்
தம்மக்க ளாக மாறிப்
போயிருந் துய்த லென்றாய்ப்
புதிர் விடு படுவ தன்றோ ?