பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

இரவென்றும், பகலென் றும், நல்
லிளங்காலை மாலை யென்றும்.
வரவொன் றிச் செலவு மொன்றி
வைகலாய்ச் செலும்வாழ் நாளில்,
புரவொன்றப் புரியும் வேலை
புலனொன்றி முடித்தால், நூலைப்
பரிவொன்றிக் கற்றாய்ந் தன்றிப்
பண்பட்டோ ராகோம் நாமே!

போதற்ற போதும், புக்க
புலன் விட்டுப் போகா வாறு,
கோதற்ற கொள்கை கூறிக்
குவலயந் தனையுய் விக்கும்
தீதற்ற குறளில் கூடத்
தெய்வத்தைப் புகுத்தி விட்டார்,
சூதுற்ற வுள்ளங் கொண்ட
சுய நலச் சூழ்ச்சி யாளர்!

நிறைவிணக் கம்செய் யும்நம்
நிகரிலாக் குறளில் நின்ற
'இறைவணக் கம்'மென் கின்ற
இனியநற் பெயரை நீக்கி,
முறைவணக் கம்போய் முற்றும்
மூகராய் மாற்ற நம்மை,
மறைவணக் கம்செய் வோன்தான்
மறுபெய ரிட்டா னன்றே!

கழுத்தினில் தாலி யென்று
கட்டினோன் கணவ னாமா
'றெழுத்தினை யறிவித் தோன்மற்
றிறைவ'னென் பதனை யெற்றிப்
பழத்தினைத் தின்று தோலைப்
பாமரர்க் கீவோன் பைய,
அழித்தனன் ; கடவுள் வாழ்த்தென்
றழியாதங் கெழுதி னானே!