பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

பதரையே நெல் போல் பண்ணிப்
பணம்பண்ணும் பாவிக் கேற்பப்
புதிரையே சொல்போல் போட்டுப்
புதுக்கவி புனையேன்; பூவல்
முதிரையே குழம்பு; முன்றில்
முருங்கையே பொரியல் ; முன்னாள்
மதுரையே தந்த சங்கம்
மலர்ந்த நூல் சுவையுற் றற்றே!

மாறுகாய்ந் துரிய மண்ணில்
மணியாக விளைவித் துத்தம்
வீறுகா யாது வைத்தே
வெளியாரும் விரும்பு மாறு,
பேறுகா யாது பேணும்
பெண்மணி, பெட்பா யிட்ட
வூறுகாய்த் தயிர்ச்சோற் றுக்கிவ்
வுலகிலோ ருவமை யுண்டோ ?

பற்பலர் பரிந்து பார்த்துப்
பரவசப் படவைக் கின்ற
வெற்பலர் சுனையிற் பூத்த
விரைமலர்க் குவளைக் கண்ணாள்,
'பொற்பலர் பொழுதில், வந்து
பொருந்திய விருந்திஃ' தென்னக்
கற்பலர் கவனப் பாங்கில்
கைகமழ்ந் திட்ட தன்றே!

'நம்பினோர் தமைத்தாம் நம்பி
நயந்தோரை வியந்து, நாளைத்
தம்பினோர் தமக்குத் தாமே
தகுந்தமேற் கோள்தா' னென்னும்
தும்பிநேர் விழிமென் தோகை
தொடர்ந்து,கை வாய்து லக்கச்
செம்பு நீர் கொண்டு நின்றாள்,
சிறியதோர் துண்டும் சேர்த்தே!