பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வியாபாரம்


கூட்டினி லிருந்து கூவிக்
குறிப்பாகப் பறந்து சென்று
காட்டினி லிரையைக் கொண்டு
கடுகித்தாய்ப் புறவை வந்தஃ
தூட்டவாய் திறக்கும் குஞ்சா
யுவப்பான வுணர்வி லுண்ட
வீட்டினைப் பாங்கு செய்தவ்
வித்தகி வீற்றாள், வந்தே!

சுவையான வுணவுண் பித்தென்
சோர்வினைத் தீர்த்தோர் சொக்கிச்
செவியான தினிக்கத் தேக்கிச்
சிந்தையும் வாங்கி வைக்கக்
கவியேன மெனப்பெய் தீவேன்,
கனிச்சாறாய்க் கருத்தை யின்று;
புவியான துயர்த்திப் போற்றும்
புகழெய்திப் பொலியு மாறே!

"எதிர்காலம் பற்றி யெண்ணின்
இயங்குதற் கியலா வாறாய்ப்
புதிர்கோலம் போலப் போந்தெம்
புலனையச் சுறுத்து தையா!
கதிர்கால மறிந்து கொய்து
களங்கண்டு கைக்கா சாக்கின்
உதிர்கோலச் சிதர்த்தேங் காயா
யொழியுதின்" றென்றான், நண்பன்

"எந்திர மயமா யெல்லாம்
இயங்கிடும் கால கட்டம்;
தொந்திர வேக போகத்
தொழில்முறை தனிலே தோன்றி
வந்தது வணிக ராட்சி!
வறிஞர்கள், வயிறு காய்ந்து
சிந்துங்கண் ணீரில், செல்வம்
சேர்த்தவர் குளிப்ப தின்றே!